UPDATED : மார் 22, 2024 12:55 PM
ADDED : மார் 22, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. நடப்பு நிதியாண்டின் இறுதி நாளான வரும், 31ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அன்று, அனைத்து வங்கிகளுக்கும் வேலைநாளாக அறிவித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வங்கிகளும் வரும், 31ம் தேதி வழக்கம் போல் செயல்பட உள்ளன.

