sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயிகளுக்காக "ஹைடெக்'"இ-வேளாண்மை' திட்டம்

/

விவசாயிகளுக்காக "ஹைடெக்'"இ-வேளாண்மை' திட்டம்

விவசாயிகளுக்காக "ஹைடெக்'"இ-வேளாண்மை' திட்டம்

விவசாயிகளுக்காக "ஹைடெக்'"இ-வேளாண்மை' திட்டம்


ADDED : ஆக 19, 2011 11:41 PM

Google News

ADDED : ஆக 19, 2011 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை நீர்வள நிலவள திட்டத்தின் கீழ், இணையதள வேளாண்மை திட்டம் தெற்காறு பாசன உபவடிநில பகுதியில் துவக்கப்பட்டுள்ளது. இதற்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, செல்லம்பட்டி பகுதியில் வேளாண் பிரச்னைகளுக்கு தீர்வு; தகவல் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளித்தல்; இ-வேளாண்மை தாக்கத்தை ஆராய்தல் நோக்கம்.

விவசாய விஞ்ஞானிகள், விவசாயிகள், விரிவாக்க பணியாளர்கள் இணைந்து செயல்படுவர். பயிர்களில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையை ஆராய்ந்து, விவசாயிகளுக்கு உடனுக்குடன் பரிந்துரை தெரிவிப்பர். அறிவுசார் வேளாண்மை மூலம் அதிக மகசூல் பெறலாம். விவசாயிகளின் நில அளவைப் பொறுத்து உறுப்பினர் சந்தா 50 முதல் 150 ரூபாய் வசூலிக்கப்படும். இது வேளாண் பயனாளிகள் சங்கம், வேளாண்

அறிவியல் நிலையம் கூட்டு கணக்கில் வங்கியில் வைக்கப்படும். சந்தேகங்கள் அல்லது வேளாண் பிரச்னைகளை மொபைல்போன் மூலம் களப்பணியாளர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். ரகம் தேர்வு, சந்தைதகவல்களை அறியலாம். களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பயிர்களை மின்னணு கருவி மூலம் படம் பிடிப்பர்.

'லேப்டாப்' மூலம் இன்டர்நெட்டில் வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு அனுப்பப்படும். அன்று பகல் 2 முதல் 3 மணிக்குள் விஞ்ஞானிகள் களப்பணியாளர்கள் மூலம் அல்லது விவசாயிகளுக்கு மொபைல்போன் மூலம் பரிந்துரை வழங்கப்படும். இது உறுப்பினர் அட்டையில் பதிவு செய்யப்படும். தலைவர், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம்-தெற்காறு உபவடி நீர்ப்பகுதி, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104, 0452-242 2955 ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us