ADDED : ஜூன் 21, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு, தென்மாவட்டங்களை கண்காணித்து வரும் மதுவிலக்கு எஸ்.பி., சுஜீத்குமார் கூறியதாவது:
மாதந்தோறும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனையிட்டு வருகிறோம். இதுவரை கள்ளத்தனமாக மது, சாராயம் விற்றதாக எந்த புகாரும் வரவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, கூடுதல் கவனம் செலுத்த டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 37 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கள்ள மது விற்பனை குறித்து இலவச டோல் ப்ரீ எண் 10581 அல்லது தென்மண்டலத்திற்கான வாட்ஸாப் எண் 94984 10581ல் மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

