தி.மு.க., கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து 38 பேர் காயம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவிக்கரம்
தி.மு.க., கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து 38 பேர் காயம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவிக்கரம்
ADDED : மார் 24, 2024 11:19 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க, கொட்டையூர் காலனியை சேர்ந்த இரு ஆண்கள், 36 பெண்கள் என, 38 பேர், மினி சரக்கு வேனில் கள்ளக்குறிச்சி வந்தனர்.
அதே பகுதியை சேர்ந்த ராஜி, 29, வேன் ஓட்டினார். காலை, 10:30 மணியளவில் சேலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுமாம்பட்டு பிரிவு சாலை அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்தில், 38 பேர் காயமடைந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார், காயமடைந்த பலரையும் தன் காரில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

