ADDED : மார் 25, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகம் முழுதும் கோடை வெப்பம் தொடர்கிறது. கடந்த 20 முதல் 22ம் தேதி வரை, சில இடங்களில் கோடை மழை பெய்தது. பின், மீண்டும் அனைத்து இடங்களிலும் வெயில் அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சேலத்தில், 39 டிகிரி செல்ஷியஸ், அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சேலம் தவிர மதுரை, ஈரோடு, தர்மபுரி ஆகிய இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவானது.
வரும் நாட்களை பொறுத்தவரை, இன்று முதல் ஐந்து நாட்களுக்கு, தமிழகத்தில் இயல்பான வெப்பநிலையில் இருந்து, படிப்படியாக 5 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

