ADDED : ஆக 16, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் பல இடங்களில் பணிபுரியும் டி.எஸ்.பி.,க்கள் 40 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீனிவாசன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்திற்கும்; திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பி., முத்துகுமரன், ஈரோடு டவுனுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி., சிந்து, திருவள்ளூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் உட்பட, மாநிலத்தில் பல இடங்களில் பணிபுரியும் டி.எஸ்.பி.,க்கள் 40 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

