பார்லியில் 40 எம்.பிக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்: ஸ்டாலின் உறுதி
பார்லியில் 40 எம்.பிக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்: ஸ்டாலின் உறுதி
UPDATED : ஜூன் 15, 2024 08:53 PM
ADDED : ஜூன் 15, 2024 08:43 PM

கோவை: பார்லி, தேர்தலில் வெற்றிபெற்ற 40 எம்.பிக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
நடந்து முடிந்த பார்லி,,பொது தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா கோவை கொடிசியாவில் நடைபெற்றது விழாவில், வெற்றி பெற்ற விருதுநகர் தொகுதி மாணிக்கம் தாகூர் -ஐ தவிர மற்ற 39 எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிதலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற எம்,பி.,க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்து கட்டமைத்த பிம்பத்தை ஒரு ஸ்வீட் பாக்ஸ்சால் உடைத்து விட்டார். இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நடக்கும் பாராட்டு விழா இது. கடந்த முறையை விட கோவை சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. 40-ம் நமதே என நான் முழங்கியதற்கான நம்பிக்கைக்கு அடித்தளமே கொள்கைக்காக கூடியுள்ள தொண்டர்களே காரணம். கூட்டணியின் ஒற்றுமை தான் தமிழ்நாட்டில் வெற்றிக்கான அச்சாணி, இங்கு பேசிய பாராட்டு சொற்களை மாலையாகக் கோர்த்து தொண்டர்கள், தோழர்கள், உடன் பிறப்புகளுக்கு காணிக்கையாக்குகிறேன்.
ரத்தத்தை வியர்வையாக சிந்தக்கூடிய தொண்டர்கள் நம் தொண்டர்கள் . அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடத்த வெற்றி இது. நாம் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி வாக்களித்த மக்களுக்கும். வாய்ப்பளித்த கட்சிக்கும் உண்மையாக தமிழக எம்.பிக்கள் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்து அரணாக தமிழக எம்.பிக்கள் இருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெறும்.
28 கட்சிகள் சேர்ந்து அமைத்த கூட்டணியை இ.டி, ஐ.டி சிபிஐ., மூலம் பா.ஜ,
மிரட்டியது. 240 இடங்களில் வென்றிருப்பது பா.ஜ.,வின் வெற்றி அல்ல.237
எம்.பிக்கள் எதிர்கட்சியாக அமர்ந்திருப்பதால் பா.ஜவால் நினைத்ததை எதுவும்
செய்ய முடியாது. பார்லியில் நமது எம்பிக்கள் 9,695 கேள்விகள் எழுப்பி
உள்ளனர். பா.ஜ பெரும்பான்மையாக இருந்த போதே அதிக கேள்வி கேட்டு
பார்லியையே திரும்பி பார்க்க வைத்தவர்கள் நமது எம்.பிக்கள்.
2004-ல் திமுக பெற்ற 40க்கு 40 வெற்றியால் ஜெயலலிதா தனது நடவடிகக்கையை மாற்றிக்கொண்டார். ஜெயலலிதா நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம் 41-வது வெற்றி என கருணாநிதி கூறினார். அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலைமைப்பு புத்தகத்தை பிரதமர் தொட்டு வணங்கியது தற்போது 41-வது வெற்றி . நாயுடுவும் நிதிஷூம் ஆதரவு தந்திருக்காவிட்டால் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை ஏது. தமிழக எம்.பிக்களின் குரல் இனி வலுவாக பார்லியில் எதிரொலிக்கும்.எங்களது எம்.பிக்கள் வாயால் வடை சுடுபவர்கள் அல்ல. கருத்துக்களால் ஆணவத்தை சுடுபவர்கள். வெயிட் அண்ட் சீ .பாசிச வழியில் பா.ஜ., செல்வதை எம்பிக்கள் கட்டுப்படுத்தவேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

