ADDED : மே 30, 2024 01:16 AM

திருப்பூர்: கடந்த ஐந்து ஆண்டுகளில், நம் நாட்டில் இருந்து, 442 கோடி 'டி-சர்ட்'கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மொத்த 'டி-சர்ட் 'ஏற்றுமதியில், பருத்தி நுாலிழையில் தயாரித்த 'டி-சர்ட்' முதலிடத்தில் இருக்கிறது.
இதுகுறித்து 'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்' கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
புதிய சந்தைகளை கைப்பற்றாததால், ஐந்தாண்டுகளாக, எண்ணிக்கை அடிப்படையில், ஆடை ஏற்றுமதி உயரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில், 'சீனா பிளஸ் ஒன்' என்ற அடிப்படையில், வேறு நாடுகளுக்கு வியாபாரத்தை மாற்றும் முயற்சி தீவிரமாகியுள்ளது.
உலக அளவில், சில்லரை வர்த்தக கையிருப்பு குறைந்துள்ள நிலையில், புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய சந்தைகளை ஈர்த்து இந்தாண்டு ஏற்றுமதியை, குறைந்தது 10 சதவீதம் உயர்த்திட முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.