கேரள அரசுக்கு ரூ.5 கோடி தமிழக மீட்புக்குழு சென்றது
கேரள அரசுக்கு ரூ.5 கோடி தமிழக மீட்புக்குழு சென்றது
ADDED : ஜூலை 31, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், 5 கோடி ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகிய இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழுவினர், கேரளா சென்றுள்ளனர்.
மீட்புக் குழுவில், ஒரு இணை இயக்குனர் தலைமையில் 20 தீயணைப்பு வீரர்கள், ஒரு எஸ்.பி., தலைமையில், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்பு பணி வீரர்கள், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடம் பெற்றுஉள்ளனர்.
சூலுார் விமானப்படைத் தளத்தில் இருந்து, இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன.

