தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 5 நாள் வெயில் வாட்டும் வானிலை மையம் தகவல்

5 நாள் வெயில் வாட்டும் வானிலை மையம் தகவல்

5 நாள் வெயில் வாட்டும் வானிலை மையம் தகவல்


ADDED : மே 27, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : 'தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 1 வரை, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம். அதேநேரத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை, வெப்பநிலை உயரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், 5; சென்னை வில்லிவாக்கத்தில், 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக, சென்னை மீனம்பாக்கத்தில், 38 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.

இன்று முதல் ஜூன் 1 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யலாம். வெப்ப நிலையை பொறுத்தவரை, அடுத்த ஐந்து நாட்களுக்கு, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில், பொதுவாக 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் உயரும். இன்று அதிகபட்ச வெப்பநிலை அனேக இடங்களில் இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும்; நாளை குமரிக்கடல் பகுதியில், மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசலாம்.

வடக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், இன்று மாலை வரை மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us