ADDED : ஜூன் 28, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.
அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர், கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே, குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சுரேஷ் புகார் அளித்ததையடுத்து, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

