முன்னாள் சார் - பதிவாளரின் ரூ.100 கோடி சொத்து பறிப்பு மனைவிக்கும் சேர்த்து 5 ஆண்டு ஜெயில்
முன்னாள் சார் - பதிவாளரின் ரூ.100 கோடி சொத்து பறிப்பு மனைவிக்கும் சேர்த்து 5 ஆண்டு ஜெயில்
ADDED : ஏப் 26, 2024 01:29 AM

திருச்சி:திருச்சி மாவட்டம், முசிறி அருகே, பில்லாதுறை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன், 79. கடந்த 1989- - 93ம் ஆண்டுகளில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் சார் - பதிவாளராக இருந்தார்.
அப்போது, வருமானத்திற்கு அதிகமாக அவரது பெயரிலும், மனைவி வசந்தி பெயரிலும், 32 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கினார். அவற்றின் மதிப்பு இப்போது 100 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2001ல் ஜானகி ராமன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜானகிராமனுக்கும் வசந்திக்கும் தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசிடம் ஒப்படைக்கவும் திருச்சி ஊழல் தடுப்பு கோர்ட் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

