ADDED : ஜூலை 11, 2024 02:06 AM

ராமேஸ்வரம் :இலங்கையில் கடலோரப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு, சீனா 500 வீடுகள் வழங்கி தாராள மனதை காட்டி, இந்தியாவுக்கு 'செக்' வைக்க திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் சீன ஆதரவுடன் கடல் அட்டை பண்ணை அமைக்கப்பட்டது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதை சமாளிக்கவும், ஏற்கனவே தமிழர்களுக்கு 10,000 வீடுகளை இந்தியா வழங்கியதை மறைக்கும் விதமாகவும், தற்போது 500 ரெடிமேட் வீடுகளை சீனா வழங்கியுள்ளது.
உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116, கிளிநொச்சி, முல்லை தீவு, மட்டக்களப்பு, திரிகோணமலை, மன்னார், கல்முனை ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 64 வீதம், 500 வீடுகளை நேற்று கொண்டு வந்து இறக்கியுள்ளது.
இந்தியாவுக்கு மட்டுமின்றி, இலங்கைக்கும் எதிர்காலத்தில் இது சிக்கலை ஏற்படுத்தும் என இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.

