தேர்தல் விடுமுறை எதிரொலி மின் நுகர்வு 6 கோடி யூனிட் சரிவு
தேர்தல் விடுமுறை எதிரொலி மின் நுகர்வு 6 கோடி யூனிட் சரிவு
ADDED : ஏப் 20, 2024 07:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால், வீடு மற்றும் அலுவலகங்களில், 'ஏசி' சாதனத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், மாநிலம் முழுதும் 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவான மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில் இம்மாதம் 18ம் தேதி, 44.82 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து அதிகரித்து வந்த மின் நுகர்வு, தேர்தல் நாளான நேற்று முன்தினம் 6.06 கோடி யூனிட் சரிந்து, 38.76 கோடி யூனிட்களாக குறைந்தது.

