ADDED : ஜூன் 27, 2024 07:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நில அபகரிப்பு மோசடியில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்வதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி தெரிவித்து உள்ளது
கரூரில் 100 கோடி மதிப்புள்ள22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.