திருச்சி, கரூரில் ரூ.800 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்:- நேரு தகவல்
திருச்சி, கரூரில் ரூ.800 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்:- நேரு தகவல்
ADDED : ஜூன் 23, 2024 06:08 AM
சென்னை : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு சட்டசபையில் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:
l திருச்செங்கோடு, கொல்லங்கோடு, சோளிங்கர், கம்பம் ஆகிய நகராட்சிகளில், 45.50 கோடி ரூபாயில், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.
l ஓசூர், திருப்பூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கரூர் மாநகராட்சிகள், மதுராந்தகம், எடப்பாடி, குளச்சல், வடலுார், கோவில்பட்டி, மானாமதுரை, ஸ்ரீவில்லிபுத்துார், சிதம்பரம், பண்ருட்டி, அதிராம்பட்டினம், திருப்பத்துார், வாணியம்பாடி, பள்ளப்பட்டி, கம்பம், பெரம்பலுார், திருவண்ணாமலை நகராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்கள், 76.30 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
l கடலுார், தாம்பரம், திண்டுக்கல், கரூர், ஓசூர் மாநகராட்சிகள், ராஜபாளையம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிதம்பரம், விருத்தாசலம், மறைமலை நகர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, துறையூர். அரக்கோணம், திருவந்திபுரம், விழுப்புரம், திண்டிவனம், மேட்டூர், நாமக்கல், பள்ளப்பட்டி, புகழூர், புஞ்சை புளியம்பட்டி, திருமங்கலம், திருச்செங்கோடு, கோபி, தாரமங்கலம், திருப்பத்துார், கம்பம், சிவகங்கை, வாணியம்பாடி, நெல்லிக்குப்பம், திருக்கோவிலுார், மானாமதுரை, பெரியகுளம் ஆகிய நகராட்சிகளில், 145.82 கோடி ரூபாயில் புதிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும்.
l சேலம், தாம்பரம், மதுரை, ஓசூர், நெல்லை, விழுப்புரம், ஊட்டி, கொடைக்கானல், மயிலாடுதுறை, ராணிப்பேட்டையில் அறிவியல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
l திருச்சி, ஓசூர், ஆவடியில் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் உள்ள நீர்நிலைகள், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
l தஞ்சை, திருச்சி, திருச்செந்துார், ஜெயங்கொண்டம், செங்கல்பட்டு, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மயிலாடுதுறை, மன்னார்குடி, தேனி, கொடைக்கானல், ஊட்டி, கூத்தாநல்லுாரில் 346.80 கோடி ரூபாயில் புதிய சந்தைகள் அமைக்கப்படும்.
l திருச்சி, திருவண்ணாமலையில் 55.70 கோடி ரூபாயில், 'பயோமைனிங்' முறையில் கழிவுகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும். திருச்சி, மதுரை, தாம்பரம், கோவை மாநகராட்சிகளில் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
l மாநகராட்சி, நகராட்சிகளில், 32 கோடி ரூாயில், புதிய 'பயோ காஸ்' மையங்கள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள 38 பயோ காஸ் மையங்கள் 22.80 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
l நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளின் மேற்கூரைகளில் சேகரமாகும் மழை நீரை, குழாய்கள் வாயிலாக சேகரித்து, பயன்படாத ஆழ்துளை கிணறுகள், பொது கிணறுகளில் செலுத்தி நிலத்தடி நீரை உயர்த்த, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்.
l திருச்சி மாவட்டத்தில் 591 ஊரக குடியிருப்புகள், கரூர் மாவட்டத்தில் 604 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், 800 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
l விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் 80 கோடி ரூபாயில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.