ADDED : மே 06, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிபுளி: ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரைப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 97 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வேதாளை அருகே வடக்கு பாக் ஜலசந்தி கடற்கரைப்பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு மூடைகள் கிடந்தன அதனை சோதனையிட்ட போது கடல் அட்டைகள்97 கிலோ இருந்தது. அதனை கைப்பற்றி மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்து கடல் அட்டைகளை பிடித்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.------