வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.67 லட்சம் மோசடி டீ துாள் விற்பனையாளர் மீது வழக்கு
வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.67 லட்சம் மோசடி டீ துாள் விற்பனையாளர் மீது வழக்கு
ADDED : ஜூன் 25, 2024 01:46 AM
தேனி: தேனியில் கணவரை பிரிந்து 12 வயது மகளுடன் வசிக்கும் பெண்ணிடம் சென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.67 லட்சம் மோசடி செய்த என்.ஆர்.டி.,நகரைச் சேர்ந்த டீ துாள் விற்பனையாளர் சுரேஷ் என்ற மஹாதனதேவ் 46, மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அல்லிநகரம் தெற்கு சொக்கம்மன் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மனைவி அம்பிகா 38. இவர் கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
டீ துாள் விற்பனை செய்யும் சுரேஷ், அம்பிகா குடும்பத்தினருக்கு அறிமுகமானார். பின் அவர், ''எனக்கு தலைமை செயலகத்தில் பணிபுரியும் முக்கிய அலுவலர்களை தெரியும்.
அம்பிகாவிற்கு வேலை வாங்கித்தருகிறேன்,'' என்றார்.
அதை நம்பிய அம்பிகா 2022 ஆக., 20ல் ரூ.1.50 லட்சம் வழங்கினார்.
பணத்தை பெற்ற சுரேஷ், வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்தார். மேலும் சென்னை செல்ல வேண்டும் எனக்கூறி 2022ல் ஜூலை 8 ல் ரூ.10 ஆயிரம், பின் அடுத்தடுத்து ரூ.7 ஆயிரம் வங்கி மூலம் பெற்றார்.
ஆனால் வேலை வாங்கித்தராமலும், பணத்தையும் திருப்பி தராமலும் மோசடி செய்தார்.
அம்பிகா எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.
எஸ்.பி., உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., ஜீவானந்தம் மற்றும் போலீசார் சுரேஷ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.