ADDED : ஜூலை 16, 2024 02:09 AM
காட்பாடி: வேலுார் மாவட்டம், கஸ்பா செல்வபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 52; வேலுார் தனியார் மருத்துவ கல்லுாரியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் மனைவி எலிசபெத், 48; இவர்கள் மகள் பெட்டினா. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குடிபாலாவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், செவிலியர் பட்டய படிப்பு படிக்கிறார்.
இவரை பார்க்க, வார இறுதி நாளில் பெற்றோர் சென்று வருவது வழக்கம். அதன்படி, அவரை பார்க்க, நேற்று முன்தினம் மாலை, 'ஹோண்டா' பைக்கில், 'ஹெல்மெட்' அணியாமல் இருவரும், சித்துார் நோக்கி சென்றனர்.
கிறிஸ்டியான் பேட்டை அருகே கன்டெய்னர் லாரியை முந்த முயன்ற போது, எதிரே வாகனம் வந்ததால், நிலை தடுமாறிய இருவரும் சாலையில் விழுந்ததில், கன்டெய்னர் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

