குளித்தலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தாய் மற்றும் மகள் உயிரிழப்பு
குளித்தலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தாய் மற்றும் மகள் உயிரிழப்பு
ADDED : மே 13, 2024 08:21 PM

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ராஜேந்திரம் பஸ் ஸ்டாப் அருகில் கரூர் அரசு கல்லூரி அருகில் வசித்து வரும் ஜெனிபர் வயது 37. தையல் தொழிலாளி. இவரது மகள் உமர் ரெஜினா வயது 17. இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி உறையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மதியம் 4.20 மணி அளவில் கருர் நோக்கி வரும்பொழுது கரூர் தான்தோன்றி மலை இந்திரா நகர் சேர்ந்த ஜோன்ஸ் மரிய லெனின் என்பவர் தனக்கு சொந்தமான ஹோண்டா காரில் திருச்சி நோக்கி சென்றார் .
அப்போது அதி வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டிச் சென்று எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதினர்.இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் இருவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாய் ஜாஸ்மின் பரிதாபமாக உயிரிழந்தார்.மகள் உமர் ரெஜினா தலையில் பலத்த காயத்துடன் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்
அங்கு சிகிச்சை பலனின்றி உமர் ரெஜினா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சாலை விபத்தில் தாய் மகள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.குளித்தலை காவல் ஆய்வாளர் உதயகுமார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய உடல் கூறு ஆய்வுக்காக உட்படுத்தி உள்ளனர்.
இது குறித்து குளித்தலை போலீசார் விபத்து ஏற்படுத்திய ஜோன்ஸ் மரிய லெனின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.