ADDED : மார் 22, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடுநாமக்கல் தொகுதியின் கொ.ம.தே.க., வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டு, தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுக்கு முன், தான் சார்ந்த ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை வீடியோ, சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன்,டில்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சூரியமூர்த்தி வெளிப்படையாக ஜாதி வன்மத்துடன் பேசும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இது, சமூக நீதிக்கு எதிரானது; ஜாதிய வன்ம கருத்தாகும். எனவே அவரை மாற்ற வேண்டும் அல்லது அவரது வேட்பாளர் படிவத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

