ADDED : ஆக 30, 2024 05:44 AM

கடலுார்: ரெட்டிச்சாவடி போலீசாரை மிரட்டிய புதுச்சேரி ரவுடி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கம் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் விநாயகமூர்த்தி, 34; ரவுடி. இவர், கடந்த 5ம் தேதி கரிக்கன்நகர் மலட்டாறு பாலம் அருகே, அவ்வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார்.
தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று, ரவுடி விநாயகமூர்த்தியை மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, விநாயகமூர்த்தியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ரெட்டிச்சாவடி, துாக்கணாம்பாக்கம் மற்றும் புதுச்சேரி மாநிலம் மங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை மற்றும் வெடிக்குண்டு வீசியது உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
இவரது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, ரவுடி விநாயகமூர்த்தியை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல், கடலுார் சிறையில் உள்ள விநாயகமூர்த்தியிடம் நேற்று ரெட்டிச்சாவடி போலீசார் வழங்கினர்.