வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மாநிலம் தழுவிய போராட்டம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மாநிலம் தழுவிய போராட்டம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
ADDED : ஜூன் 27, 2024 11:52 PM
திண்டிவனம்: 'வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க மறுத்தால், மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மத்திய அரசு ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திதான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை.
இல்லாத காரணங்களுக்கு வன்னியருக்கான இடஒதுக்கீடு தருவதற்கு தி.மு.க., அரசு மறுத்தால், மாநில அளவில் போராட்டம் நடத்துவோம். எந்த வகை போராட்டம் என்பதை பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளும் ஆலோசித்து முடிவெடுத்து விரைவில் அறிவிப்போம்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வரும், அமைச்சர் சிவசங்கரும் சட்டசபையில் தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது, சட்டசபையில் உரிமை மீறல் பிரச்னையை பா.ம.க., உறுப்பினர்கள் கொண்டு வருவார்கள் என்றார்.

