ADDED : ஜூன் 10, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி : தமிழகம் முழுதும், கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த நெசல் கிராமத்திலுள்ள ஆரஞ்ச் மெட்ரிக்குலேசன் பள்ளியின் மினி பஸ், மாணவ - மாணவியரை ஏற்றிக் கொண்டு நேற்று காலை படவேட்டிலிருந்து, நடுக்குப்பம் வழியாக நெசல் கிராமத்திலுள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.
நடுக்குப்பம் கிராமத்தில், மாணவ - மாணவியரை பஸ்சில் ஏற்ற நின்ற போது, பஸ்சின் இன்ஜின் பகுதியில் திடீரென தீ பிடித்து, புகை எழுந்தது. உடனடியாக, பள்ளி பஸ்சில் இருந்த, 13 மாணவர்களை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
ஆரணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். களம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

