ADDED : மே 02, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:என்.எம்.சி., முதுநிலை மருத்துவ கல்வி வாரிய துணை செயலர் அஜேந்தர் சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசிய மருத்துவ ஆணையத்தின் ராகிங் தடுப்பு பிரிவின்கீழ், மருத்துவ மாணவர்களின் மனவளத்தை காப்பதற்கான தேசிய நல குழு அமைக்கப்பட்டது. மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்களிடையே இணைய வழியே ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கூகுள் விண்ணப்ப படிவம் ஒன்று, என்.எம்.சி., தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை, அனைத்து மருத்துவ கல்லுாரி மாணவர்களும், பேராசிரியர்களும் பூர்த்தி செய்து, நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

