ADDED : மார் 27, 2024 11:37 PM

சென்னை:லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , சென்னையில் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தில் கட்சிகள் போட்டியிட வேண்டும்
ஓட்டுக்கு பணம் கொடுப்பது உறுதி செய்யப்பட்டால், வேட்பாளருக்கு 2 ஆண்டு சிறை; பணம் பெறுபவர்களுக்கு ஓராண்டு சிறை வழங்கப்படும்
வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்கும் முறையை மாற்றி, மாநில அளவில் ஒரே மேடையில் விவாதிக்கும் முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கப்படும்
ஓட்டு போடுபவர்களுக்கு உறுதிச்சீட்டு வழங்கப்படும். அந்த சீட்டை வைத்து, குடும்ப அட்டை, மின் இணைப்பு, ஓட்டுனர் உரிமம் கோர முடியும்
தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாட்டு கல்வி கொள்கை போல், உலக தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

