போலீஸ் விசாரணைக்கு வந்த வாலிபர் பிளேடால் கிழித்துக்கொண்டதால் பரபரப்பு
போலீஸ் விசாரணைக்கு வந்த வாலிபர் பிளேடால் கிழித்துக்கொண்டதால் பரபரப்பு
ADDED : ஆக 01, 2024 05:59 AM
கடலுார்: கடலுாரில், போலீஸ் விசாரணைக்கு வந்த வாலிபர் பிளேடால் கிழித்து கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் போலீசார், வழக்கு ஒன்றில் 38 வயது வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், வழக்கில் தொடர்புடைய நண்பர் கடலுாரில் இருப்பதாககூறியுள்ளார். இதையடுத்து, கிளாம்பாக்கம் போலீசார், அந்த வாலிபரை நேற்றுமாலை 3:30 மணிக்கு கடலுார் பாரதி சாலையில் உள்ள வணிக வளாகம்அருகே அழைத்து வந்து, அவர் மூலம், அவரது நண்பரை வரவழைத்தபோது, இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது, தன்னை ஏன் காட்டிக்கொடுத்தாய்எனக்கூறி, தன் கையில் வைத்திருந்த பிளேடால் போலீஸ் காவலில் இருந்த வாலிபரின் கன்னத்தில் கிழித்துவிட்டு, தனது கழுத்திலும் கிழித்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் சிகிச்சைக்காக கடலுார் அரசுமருத்துவமனையில் சேர்த்துவிட்டு 'எஸ்கேப்' ஆகினர். அதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்ற இருவரும், மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டனர்.
கடலுாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து கடலுார் புதுநகர் போலீசார், கிளாம்பாக்கம்போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.