ADDED : ஏப் 28, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : -சுட்டெரிக்கும் வெயிலால் ராமேஸ்வரத்தில் கோயில் யானை ராமலெட்சுமி குளத்தில் உற்சாக குளியல் போட்டு வெப்பத்தை தணித்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள யானை ராமலெட்சுமி, தினமும் ரதவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.
தற்போதைய கோடை வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தவித்த ராமலெட்சுமி, கோயில் வடக்கு நந்தவனத்தில் உள்ள குளத்தில் தினமும் உற்சாகமாக குளித்து வெப்பத்தை தணிக்கிறது. இக்குளம் அருகே யானைக்கு 'சவர் பாத்' வசதியை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

