sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஆவின் ஊழியர்கள்

/

அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஆவின் ஊழியர்கள்

அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஆவின் ஊழியர்கள்

அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஆவின் ஊழியர்கள்


ADDED : ஜூன் 24, 2024 05:18 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, முதல்வரால் இரண்டு முறை தலா, 4 சதவீதம் என, 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், ஆவின் ஊழியர்களுக்கு அது வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் ஆகியோரிடம், ஆவின் தொழிற்சங்கங்கள் வாயிலாக பலமுறை கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.

அதன்பின், ஆவின் பணியாளர்களுக்கு, 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மட்டுமே வழங்கப்படும் என, ஆவின் நிர்வாக இயக்குனர் அறிவித்தார்; ஆனால், அதுவும் இன்னும் வழங்கப்படவில்லை. இப்படி, இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 8 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல், ஆவின் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'போதிய நிதி ஆதாரம் இல்லாததால், அகவிலைப்படி உயர்வை வழங்க முடியவில்லை' என்றனர்.






      Dinamalar
      Follow us