sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆவின் குல்பி, ஐஸ்கிரீம் தயாரிப்பு பாதிப்பு திரவ நைட்ரஜன் பிரச்னை காரணமா?

/

ஆவின் குல்பி, ஐஸ்கிரீம் தயாரிப்பு பாதிப்பு திரவ நைட்ரஜன் பிரச்னை காரணமா?

ஆவின் குல்பி, ஐஸ்கிரீம் தயாரிப்பு பாதிப்பு திரவ நைட்ரஜன் பிரச்னை காரணமா?

ஆவின் குல்பி, ஐஸ்கிரீம் தயாரிப்பு பாதிப்பு திரவ நைட்ரஜன் பிரச்னை காரணமா?


UPDATED : மே 09, 2024 07:33 AM

ADDED : மே 09, 2024 01:48 AM

Google News

UPDATED : மே 09, 2024 07:33 AM ADDED : மே 09, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திரவ நைட்ரஜன் பிரச்னை காரணமாக, ஆவினில் குல்பி, ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேவையான ஆவின் குல்பி மற்றும் ஐஸ்கிரீம், அம்பத்துாரில் உள்ள பால் பொருட்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்தது.

ஏமாற்றம்


இதையடுத்து, 100 கோடி ரூபாய் செலவில், மதுரையில் மிகப்பெரிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை திறக்கப்பட்டது. அங்கிருந்து, சென்னைக்கு குல்பி, ஐஸ்கிரீம் தயாரித்து அனுப்பப்பட்டது. பலவகை குல்பிகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, முந்திரி, பாதாம், பிஸ்தா குல்பி மட்டுமே, ஆவினில் விற்பனை செய்யப்படுகிறது.

கோடைக்காலம் என்பதால், பலரும் ஆவின் குல்பிகளை வாங்குவதற்கு பாலகங்களுக்கு வருகின்றனர். ஆனால், சில நாட்களாக அங்கு குல்பி கையிருப்பில் இல்லை. இதனால், நுகர்வோர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் இருந்து குல்பி உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கு, 'டிரை ஐஸ்' எனப்படும், திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.

உத்தரவு


'திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவு பொருட்களை சாப்பிடுவதால், மூச்சுக்குழல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். எனவே, பொருட்களை பதப்படுத்தி எடுத்துச் செல்வதற்கு மட்டுமே, திரவ நைட்ரஜன் பயன்படுத்த வேண்டும்' என, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டு உள்ளது.

இப்பிரச்னையால், ஆவினில் குல்பி மற்றும் ஐஸ்கீரிம் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வினியோகம் நிறுத்தம்


திரவ நைட்ரஜன் பயன்படுத்தி குல்பி மற்றும் ஐஸ்கிரீம்களை எடுத்து செல்லக் கூடாது என, கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக குளிர்சாதன வசதி உடைய பிரத்யேக வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

வாடகை பிரச்னை காரணமாக, அந்த வாகனங்களில் ஐஸ்கிரீம் வினியோகம் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது, டிரை ஐஸ் நிரப்பிய வாகனங்களில் குல்பி, ஐஸ்கிரீம் எடுத்து செல்வதிலும் பிரச்னை எழுந்துள்ளது.

- ஆவின் அதிகாரி






      Dinamalar
      Follow us