திருச்சி எஸ்.ஆர்.எம்., ேஹாட்டலை கையகப்படுத்தியது சட்ட விரோதம்
திருச்சி எஸ்.ஆர்.எம்., ேஹாட்டலை கையகப்படுத்தியது சட்ட விரோதம்
ADDED : ஜூன் 20, 2024 10:53 PM
மதுரை:திருச்சி கொட்டப்பட்டுவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம்., குழும ேஹாட்டல் உள்ளது. குத்தகைக் காலம் முடிந்துவிட்டதால் இடத்தை காலி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கு எதிராக எஸ்.ஆர்.எம்., நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
குத்தகை ஒப்பந்தம் 1996ல் போடப்பட்டது. அங்கு மனுதாரர் தரப்பு நட்சத்திர ேஹாட்டல் கட்டியது. ஆண்டு குத்தகை தொகை 3.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இது, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்பட்டது.
குத்தகை காலம் 30 ஆண்டுகள். அது, 2024 ஜூன் 13ல் முடிவடைந்தது. அவ்வளாகத்தை ஜூன் 14 ல் கையகப்படுத்தியதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதற்கு இந்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மனுதாரர் அத்துமீறுபவர் அல்ல. அவர்களுக்கு அரசால் சொத்து வழங்கப்பட்டது. அந்த நட்சத்திர ேஹாட்டலில் பலர் தங்கியுள்ளனர். மனுதாரர் 30 ஆண்டுகளாக அங்கு உள்ளார். குத்தகை காலம் முடிந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. அதை புதுப்பிப்பதற்கான மனுதாரரின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.
இச்சூழலில் ஜூன் 14ல் அவ்வளாகத்திற்குள் நுழைந்து கையகப்படுத்திய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசாரின் நடவடிக்கை தன்னிச்சையானது; சட்டவிரோதமானது. அதிகாரிகள் உரிய சட்ட நடைமுறையை பின்பற்றியிருக்க வேண்டும். மனு அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

