sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடிக்கிறார் ஸ்டாலின்: பழனிசாமி ‛‛அட்டாக்''

/

நடிக்கிறார் ஸ்டாலின்: பழனிசாமி ‛‛அட்டாக்''

நடிக்கிறார் ஸ்டாலின்: பழனிசாமி ‛‛அட்டாக்''

நடிக்கிறார் ஸ்டாலின்: பழனிசாமி ‛‛அட்டாக்''

4


UPDATED : ஏப் 07, 2024 10:40 AM

ADDED : ஏப் 06, 2024 11:31 PM

Google News

UPDATED : ஏப் 07, 2024 10:40 AM ADDED : ஏப் 06, 2024 11:31 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'லாட்டரி மார்ட்டினிடம், தேர்தல் பத்திரம் வழியே 656 கோடி ரூபாயை கறந்த முதல்வர் ஸ்டாலின், உத்தமர் போல நடிக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடுமையாக தாக்கியுள்ளார்.

அவரது சமூக வலைதள பதிவு:


கோவை தொகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஓட்டு சேகரித்தேன். பல்வேறு சாலை திட்டங்கள், குடிநீர் வசதிக்கான திட்டங்களை இத்தொகுதிக்கு நிறைவேற்றியது அ.தி.மு.க., அரசு.

தேர்தல் ஜூரத்தால் ஸ்டாலின் ஏதேதோ புலம்பிக் கொண்டு இருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக நாகரிகம் இல்லாமல் பேசுகிறார். ஒரு முதல்வர் பேசுகின்ற பேச்சா இது. வெள்ளைக்கொடி ஏந்திய 23ம் புலிகேசி போல, வெள்ளைக்குடை இந்திய பொம்மை வேந்தர் ஸ்டாலின்.

மயங்கியிருப்பார்


இவர், 656 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வழியே பெற்றுவிட்டு, உத்தமர் போல் நடிக்கிறார். நடிகர் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், மயங்கி விழுந்திருப்பார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி தென்னுார் உழவர் சந்தையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், திருச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:

அ.தி.மு.க., அரசு தான், இந்திய அளவில் தமிழகம் முதன்மையாக இருக்க அடித்தளமிட்டது. 'இண்டியா' கூட்டணி தான், நாட்டை ஆளப்போவது போலவும், அதில் தி.மு.க., முதன்மையாக விளங்கப் போவது போலவும் தோற்றத்தை ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், அடுத்த பிரதமர் ராகுல் தான் என்று ஸ்டாலின் பேசிய பிறகு தான், எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்., இழந்தது; அவ்வளவு ராசியானவர் ஸ்டாலின்.

இண்டியா கூட்டணியை ஏற்படுத்திய நிதிஷ் குமார் தற்போது பா.ஜ., கூட்டணியில் உள்ளார். டில்லியில் கூட்டணி அமைத்துள்ள காங்., - ஆம் ஆத்மி கட்சிகள், பஞ்சாபில் எதிர் எதிரே போட்டியிடுகின்றன. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., தனித்து போட்டியிடுகிறது.

ஸ்டாலின் பேசும் போதெல்லாம், காரில் டயர்கள் கழன்று ஓடுவது போல, இண்டியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக விலகி வருகின்றன.

குழப்பமான நிலை


தேர்தலில் ஒருங்கிணைப்பு இல்லாமல், அந்த கூட்டணி வெற்றி பெற்று எப்படி பிரதமரை தேர்வு செய்வர் என்று தெரியவில்லை. அந்த கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர் என்றும் சொல்லவில்லை.

கேரளா வயநாட்டில் போட்டியிடும் ராகுலை எதிர்த்து, கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சி போட்டியிடுகிறது. இப்படி குழப்பமான நிலையில் உள்ள இண்டியா கூட்டணி வெற்றி பெற்று எப்படி ஆட்சிக்கு வர முடியும்?

இண்டியா கூட்டணி போர்வையில், ஸ்டாலின் தேர்தலை சந்திக்கிறார். கூட்டணி இல்லையென்றால், லோக்சபா தேர்தலில் தி.மு.க., டிபாசிட் கூட வாங்காது.

பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியது ஸ்டாலினுக்கு பொறுக்காததால், கள்ளக் கூட்டணி, கள்ளத்தொடர்பு என்கிறார். அ.தி.மு.க., கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை.

வேண்டுமென்றால், நேரடியாகவே கூட்டணி வைப்போம். கூட்டணி வைப்பது எங்கள் கட்சி விஷயம். அதில், உங்களுக்கு என்ன அக்கறை?

பா.ஜ., கூட்டணியில் இருந்து நாம் வந்ததை பொறுக்க முடியாமல் எரிந்து கிடக்கிறார். பழக்கதோஷத்தில் கள்ளத்தொடர்பு என்று ஸ்டாலின் நம்மை சொல்கிறார்.

அ.தி.மு.க., சின்னத்தை முடக்க, சில எட்டப்பர்கள் இங்கே இருந்தனர். தி.மு.க.,வோடு சேர்ந்து நிறைய தொல்லைகள் கொடுத்தனர்.

செய்தது என்ன?


ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள், தெய்வங்களாக இருப்பதால், அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது. கடந்த 1999ல் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சரவையில் தி.மு.க., இருந்த போது, நோய்வாய்பட்ட முரசொலி மாறனை, இலாகா இல்லாத அமைச்சராக பிரதமர் வாஜ்பாய் ஓராண்டு வைத்திருந்தார்.

அதன்பின், குரங்கு மரத்துக்கு மரம் தாவுவது போல, தி.மு.க.,வினர் காங்கிரஸ் பக்கம் தாவினர். பா.ஜ., மற்றும் காங்., என, 14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க., மக்களுக்கு செய்தது என்ன?

பார்லிமென்டில் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வரவில்லை; தேவையான நிதியையும் கொண்டு வரவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் இருந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே தி.மு.க.,வின் நோக்கம்.

தமிழகத்தை அ.தி.மு.க., சீரழித்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். மூன்று ஆண்டுகளில் தி.மு.க., அரசு செய்தது என்ன? உதயநிதி பிரசாரத்துக்கு செல்லும் இடத்தில் எல்லாம், மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத காட்சியை பார்க்க முடிகிறது.

தமிழகத்தை சீரழித்துள்ள தி.மு.க., மூன்று ஆண்டுகளில் 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது; ஆனால், எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் ஒரே ஆண்டில், 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டன.

மூன்று ஆண்டுகளில் உங்களால் ஒரு மருத்துவக் கல்லுாரி கொண்டு வர முடிந்ததா? ஜெயலலிதா முதல்வராக இருந்த நான்கு ஆண்டுகளில், ஏழு சட்டக் கல்லுாரிகள் கொண்டு வந்தோம். தி.மு.க., மத்தியில், மாநிலத்தில் எங்கிருந்தாலும் கொள்ளையடிப்பர்.

மத்தியில் ஆட்சி, அதிகாரம் இருந்தால், பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கலாம் என்பது தான், தி.மு.க.,வின் திட்டம். ஸ்டாலினின் கனவு பகல் கனவு.

தி.மு.க., ஆட்சியில், மூன்று ஆண்டுகளில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் என, மளிகை பொருட்கள், 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டன. மக்களுக்கு வேலைவாய்ப்பு, வருமானம் இல்லை. மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், 7,300 கோடி ரூபாய் மதிப்பில், ஏழை, எளிய மாணவர்கள் 52.30 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டனர். அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் என்ன பாவம் செய்தனர்?

அவர்களது கனவை சிதைத்தது தி.மு.க., அரசு. இன்று ஓட்டு போடும் தகுதி பெற்ற, லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், யார் உங்களுக்கு துரோகம் செய்தனர் என்பதை சிந்தித்து தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தை சீரழித்து விட்டதாகக் கூறும் ஸ்டாலின், என்னென்ன சீரழித்தோம் என்பதை பட்டியலிட வேண்டும். அதற்கு தகுந்த பதிலை நாங்கள் சொல்கிறோம்.

முதல்வராக இருப்பவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் என்னென்ன திட்டம் கொண்டு வந்தோம் என்பதை பட்டியலிட்டு சொல்கிறோம். மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை உங்களால் சொல்ல முடியுமா?

திருச்சி மாவட்டத்தில் 1,700 கோடி ரூபாயில், டி.என்.பி.எல்., செய்தித்தாள் நிறுவனம் சார்பில் அட்டை தொழிற்சாலை நிறுவியது; காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம், 14,000 கோடி ரூபாயில் அ.தி.மு.க., ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

சவால் விட்டு கேட்கிறேன், உங்கள் ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று ஸ்டாலின் பதில் செல்ல வேண்டும். தமிழக மக்கள் அறிவுப்பூர்வமாக எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

சிந்தித்து தீர்ப்பு கொடுக்கக்கூடியவர்கள். வேண்டுமென்றே அ.தி.மு.க., ஆட்சி மீதும், கட்சி மீதும் வீண் பழி சுமத்தி, எங்களை பின்தள்ளிவிடலாம் என எண்ணிவிடாதீர்கள். அ.தி.மு.க.,வின் 30 ஆண்டு கால ஆட்சியில் தான், தமிழகம் இந்தளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us