காசா கிராண்ட் விளம்பரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்
காசா கிராண்ட் விளம்பரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்
ADDED : மார் 12, 2025 11:49 PM

சென்னை:பெரம்பூரில் காசா கிராண்ட் நிறுவனம் செயல்படுத்தும், 'மெர்க்குரி' என்ற அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் குறித்த விளம்பர பிரசாரத்தில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்க உள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம், பல்வேறு நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் பி.விமேஷ் கூறியதாவது:
சென்னையில் பல்வேறு இடங்களில், மக்களுக்கு சிறப்பான ஆடம்பர வசதிகளுடன், குடியிருப்புகளை கட்டி கொடுத்து வருகிறோம். கடந்த, 20 ஆண்டுகளில், 140க்கும் மேற்பட்ட திட்டங்கள் வாயிலாக, 50,000க்கும் மேற்பட்டோருக்கு, வீடுகள் வழங்கி இருக்கிறோம்.
மக்களின் வாழ்க்கை தரத்தை, வேறு நிலைக்கு மேம்படுத்தும் வகையில், எங்கள் குடியிருப்பு அமைய வேண்டும் என்பதில், சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்.
அந்த வகையில், சென்னை பெரம்பூரில், 20 ஏக்கர் நிலத்தில், 42 மாடிகள் கொண்ட, 'மெர்க்குரி' என்ற பெயரில் புதிய அடுக்குமாடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு எங்கும் இல்லாத வகையில், இத்திட்டத்தில், 10 மாடி கிளப் ஹவுஸ், 17 ஏக்கர் பசுமை இடம் போன்ற சிறப்பு வசதிகள் அளிக்கப்படுகின்றன. இந்த குடியிருப்பு திட்டம் குறித்த சிறப்பு அம்சங்களை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, விளம்பரப் படம் தயாரித்து இருக்கிறோம்.
இதில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்று, திட்டத்தின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். கட்டட வடிவமைப்பு ரீதியாக, இதில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அம்சங்களையும், மக்களின் விருப்பங்களையும் பிரதிபலிக்கும் வகையில், அவரது பிரசாரம் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் மிக உயரமான ஒரு கட்டடத்தில், வீடு வாங்கி வசிக்க விரும்புவோரின், சரியான தேர்வாக, இத்திட்டம் அமையும். உலக தரத்தில் வசிப்பதற்கான, அனைத்து சூழலும் கொண்டதாக, இத்திட்டம் அமைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் ஆணையம் உள்ளிட்ட அனைத்து பதிவு மற்றும் சான்றிதழ்களுடன், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, 130க்கும் மேற்பட்ட சிறப்பு வசதிகளுடன்,143 வீடுகள், 2,3,4 படுக்கை அறை வசதிகளுடன் கட்டப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.