ADDED : மார் 15, 2025 01:26 AM
கருப்பை வாய் புற்று நோயை தடுக்க, 'ஹெச்.பி.வி.,' தடுப்பூசியை, 14 வயதுடைய அனைத்து சிறுமியருக்கும் வழங்க, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
புற்றுநோய், இதயம் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறியும் வகையில், மகளிருக்கான நடமாடும் மருத்துவக் குழுக்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த, 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம், அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 800 படுக்கைகளுடன் கூடிய தன்னாட்சி பெற்ற மையமாக செயல்பட, 120 கோடி ரூபாய் வழங்கப்படும்
3,000 புதிய பஸ்கள்
வரும் நிதியாண்டில், 1,031 கோடி ரூபாயில், 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்
சென்னைக்கு, 950; கோவைக்கு, 75; மதுரைக்கு, 100 என மொத்தம், 1,125 மின் பஸ்கள் வாங்கப்படும்
தமிழகத்தில் நகரங்களை ஒட்டி வளர்ந்து வரும் பகுதிகளில், 2,000 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படும்
மாநில போக்குவரத்துக் கழகங்களின், 700 டீசல் பஸ்கள், சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு வாயிலாக இயங்கும் வகையில், 70 கோடி ரூபாயில் மாற்றப்படும்
தமிழகத்தில் வரும் நிதி ஆண்டில், 500 கி.மீ., வனப்பகுதி சாலைகள், 200 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்