ADDED : ஜூலை 20, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பதிவுத்துறையில் 2 டி.ஐ.ஜி.,க்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், கூடுதல் ஐ.ஜி.,க் கள் மாற்றப்பட்டுள்ளனர்.
பதிவுத்துறையில், முத்திரை மற்றும் பதிவு பணிகளை கூடுதல் ஐ.ஜி., நல்லசிவன் கவனித்து வந்தார். இவர் தற்போது, வழிகாட்டி மதிப்பு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளராக இருந்த டி.ஐ.ஜி., சுதா மால்யா, கூடுதல் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, முத்திரை மற்றும் பதிவு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தன் பழைய பொறுப்பை மறு உத்தரவு வரும் வரை கூடுதலாக கவனிப்பார்.
இதேபோன்று, கடலுார் மண்டல டி.ஐ.ஜி.,யாக இருக்கும் ஆர்.ஜனார்த்தனம், கூடுதல் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று, புலனாய்வு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத் பிறப்பித்துள்ளார்.

