அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 2 தொகுதிகளுக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 2 தொகுதிகளுக்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 01, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கரூர் மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஒத்தி வைக்கப்படுவதாக, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, ஒவ்வொரு தொகுதி வாரியாக, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த மாதம் 10ம் தேதி முதல் நேற்று வரை, 38 தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
வரும் 5ம் தேதி காலை புதுச்சேரி; மாலை கரூர் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், கட்சி தலைமை அறிவித்துள்ளது.