ADDED : ஜூலை 02, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சென்னை வேளச்சேரி அழகப்பன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நிலம் வாங்கித் தருவதாகக்கூறி நடிகை கவுதமியிடம் ரூ.3 கோடி வாங்கினார்.
ரூ.57 லட்சம் மதிப்பில் 64 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தார். அந்நிலத்தை செபி நிறுவனம் முடக்கி வைத்துள்ளது. போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக அழகப்பனுக்கு எதிராக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர். அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கவுதமி மனு செய்தார். நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஜூலை 4க்கு ஒத்திவைத்தார்.