முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மனுவின் உத்தரவு தள்ளிவைப்பு
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மனுவின் உத்தரவு தள்ளிவைப்பு
ADDED : ஏப் 18, 2024 12:59 AM
சென்னை:சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தாக்கல் செய்த மனுவின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு டி.ஜி.பி.,யாக பதவி வகித்த ராஜேஷ் தாசுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை உறுதி செய்து, விழுப்புரம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதையடுத்து, தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனுத் தாக்கல் செய்தார். மனு, நீதிபதி தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது.
ராஜேஷ் தாஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சி.பி.சி.ஐ.டி., தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் வாதாடினர்.
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

