ADDED : ஜூன் 24, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நேற்று சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தனர்.
சட்டசபை கூட்டத்தொடர், 20ம் தேதி துவங்கியது. மறுநாளான, 21ம் தேதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அமளியில் ஈடுபட, சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அடுத்த நாள், அதே பிரச்னைக்காக வெளிநடப்பு செய்தனர்.
நேற்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்க, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சென்றதால், நேற்று யாரும் சட்டசபைக்கு வரவில்லை.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் மட்டும் வந்திருந்தனர்.