sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., செயற்குழுவில் மத்திய அரசுக்கு கண்டனம்: மின் கட்டண உயர்வு வாபஸ் பெறவும் வலியுறுத்தல்

/

அ.தி.மு.க., செயற்குழுவில் மத்திய அரசுக்கு கண்டனம்: மின் கட்டண உயர்வு வாபஸ் பெறவும் வலியுறுத்தல்

அ.தி.மு.க., செயற்குழுவில் மத்திய அரசுக்கு கண்டனம்: மின் கட்டண உயர்வு வாபஸ் பெறவும் வலியுறுத்தல்

அ.தி.மு.க., செயற்குழுவில் மத்திய அரசுக்கு கண்டனம்: மின் கட்டண உயர்வு வாபஸ் பெறவும் வலியுறுத்தல்

21


UPDATED : ஆக 16, 2024 12:39 PM

ADDED : ஆக 16, 2024 11:35 AM

Google News

UPDATED : ஆக 16, 2024 12:39 PM ADDED : ஆக 16, 2024 11:35 AM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., செயற்குழுவில் மத்திய அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க., அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் பின்வருமாறு:

* மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களை அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது. போதி நித ஒதுக்கவில்லை எனக் கூறி மத்திய அரசை கண்டித்து தீர்மானம்.

* தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தீர்மானம்.

* மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தக் கோரி தீர்மானம்.

* மருத்துவ காப்பீடு, ப்ரீமியத்திற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்.

* மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்.

தேசிய பேரிடர்


* வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம்.

*லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தீர்மானம்.

* ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத திமுக அரசை எதிர்த்து கண்டன தீர்மானம்.

* தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற தவறிய திமுக அரசை எதிர்த்து கண்டன தீர்மானம்.

* அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணாக முடக்கி செயலிழக்க செய்து வரும் திமுக அரசை எதிர்த்து கண்டன தீர்மானம்.

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான திமுக அரசை எதிர்த்து கண்டன தீர்மானம்.

* இ.பி.எஸ்., வகுத்த தேர்தல் வியூகப்படி உள்ளாட்சி மற்றும், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க தீர்மானம்.






      Dinamalar
      Follow us