பிரசாரத்துக்கு நடிகர்களை களம் இறக்கியது அ.தி.மு.க.,
பிரசாரத்துக்கு நடிகர்களை களம் இறக்கியது அ.தி.மு.க.,
ADDED : மார் 29, 2024 10:50 PM
சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல், 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டமாக, அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய, அ.தி.மு.க., தலைமை, நடிகர், நடிகையரை களம் இறக்கி உள்ளது.
திரைப்பட இயக்குனர்கள், உதயகுமார், ரங்கநாதன், அனுமோகன், லியாகத் அலிகான், ஜெயப்பிரகாஷ், அன்பழகன், மனோஜ்குமார், ஷக்தி சிதம்பரம்; நடிகர்கள் சிங்கமுத்து, காதல் சுகுமார், ரவிமரியா.
அருள்மணி, சரவணன், வையாபுரி, தியாகு, கஞ்சா கருப்பு, சவுந்தரராஜன், சுப்புராஜ், விஜய்கணேஷ், கிங்காங், குண்டுகல்யாணம், சுந்தர்ராஜன் ஆகியோர், பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
அதேபோல, கட்சியின் கொள்கை பரப்பு செயலரும், நடிகையுமான விந்தியா, நடிகையர் கவுதமி, காயத்ரி ரகுராம், எமி, ஜெயதேவி, கலா, பாத்திமா பாபு, பபிதா, ரஜினி நிவேதா, பசி சத்யா திரைப்படப் பாடலாசிரியர் முத்துலிங்கம் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

