sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 33 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது

/

அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 33 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது

அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 33 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது

அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 33 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது


ADDED : மார் 22, 2024 01:16 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது.

புதுச்சேரி சேர்த்து, 33 லோக்சபா தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும், அ.தி.மு.க., போட்டியிடுகிறது.

அ.தி.மு.க., - தி.மு.க., இடையே, 18 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுஉள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு 5; புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீதமுள்ள, 32 லோக்சபா தொகுதிகளிலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க., களம் இறங்குகிறது.

இடைத்தேர்தல் நடக்க உள்ள, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது.

அ.தி.மு.க., போட்டியிடும், 33 தொகுதிகளில், 16 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு, நேற்று வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

அ.தி.மு.க., போட்டியிடும் 33 லோக்சபா தொகுதிகளில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஒரு முன்னாள் எம்.பி.,யும், இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ..,க்களும் போட்டியிடுகின்றனர். மற்ற அனைவரும் புதுமுகங்கள்.

தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 18 தொகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

எட்டு தொகுதிகளில் காங்கிரசுடனும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தலா இரண்டு தொகுதிகளிலும்; ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் தலா ஒரு தொகுகளிலும் அ.தி.மு.க., மோதுகிறது.

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்


தொகுதி - வேட்பாளர் பெயர் - கட்சிப்பதவி
ஸ்ரீபெரும்புதுார் - பிரேம்குமார் - இல்லை
வேலுார் - பசுபதி - இல்லை
தர்மபுரி - அசோகன் - தர்மபுரி நகர 33வது வார்டு இளைஞர் பாசறை செயலர்
திருவண்ணாமலை - கலியபெருமாள் - திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய செயலர்
கள்ளக்குறிச்சி - குமரகுரு - கள்ளக்குறிச்சி மாவட்ட செயலர்
திருப்பூர் - அருணாசலம் - ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர்
நீலகிரி, தனி - லோகேஷ் தமிழ்செல்வன் - இல்லை
கோவை - சிங்கை ராமச்சந்திரன் - தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்
பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி என்கிற கார்த்திகேயன் - ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலர்
திருச்சி - கருப்பையா - புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலர்
பெரம்பலுார் - சந்திரமோகன் - பெரம்பலுார் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர்
மயிலாடுதுறை - பாபு - மாவட்ட இளைஙர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலர்
சிவகங்கை - சேவியர்தாஸ் - கல்லல் தெற்கு ஒன்றிய செயலர்
துாத்துக்குடி - சிவசாமி வேலுமணி - சென்னை தி.நகர் வடக்கு பகுதி செயலர்
திருநெல்வேலி - சிம்லா முத்துசோழன் - இல்லை
கன்னியாகுமரி - பசிலியான் நசரேத் - மீனவர் பிரிவு இணை செயலர்
புதுச்சேரி - தமிழ்வேந்தன் - புதுச்சேரி மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர்
சட்டசபை தொகுதிவிளவங்கோடு - ராணி - மகளிர் அணி துணை செயலர்








      Dinamalar
      Follow us