'குழப்பத்தில் அ.தி.மு.க., பதட்டத்தில் தி.மு.க.,': பா.ஜ., மாநில துணைத்தலைவர் பேட்டி
'குழப்பத்தில் அ.தி.மு.க., பதட்டத்தில் தி.மு.க.,': பா.ஜ., மாநில துணைத்தலைவர் பேட்டி
ADDED : ஜூலை 02, 2024 05:14 AM

தேனி : அ.தி.மு.க., குழப்பத்திலும் தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் பதட்டத்தில் உள்ளன என பா.ஜ., மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் கூறினார்.
தேனி பா.ஜ., அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் முடிவு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்றார்.
முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் அ.தி.மு.க., 12 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. பா.ஜ., உடன் கூட்டணி இருந்திருந்திருந்தால் 30 முதல் 35 இடங்களை வென்றிருக்கலாம் என வேலுமணி கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும்கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்றால், ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்டது ஏன். தற்போது அ.தி.மு.க., குழப்பத்தில் உள்ளது.
தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. அரசின் பல்வேறு துறையினர் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தி.மு.க., பதட்டத்தில் உள்ளது.
கூட்டணி இல்லை என ஸ்டாலின் கூறினால் வெற்றி பெற முடியாது. அரசு மதுபானத்தில் 'கிக்' இல்லை என கூறிய அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.