ADDED : ஏப் 16, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனஹள்ளி பஞ்., உட்பட்ட கக்கன்ஞ்சிபுரம் ஆதிதிராவிடர் காலனி உள்ளது.
அங்கு நேற்று முன்தினம், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, பா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட செயலர் வெங்கடேசன், 29, அன்னதானம் வழங்கினார். அப்போது, பா.ஜ., கூட்டணி கட்சியான, பா.ம.க.,விற்கு ஓட்டு சேகரித்தார்.
இதில், கோபமடைந்த அப்பகுதி, அ.தி.மு.க.,வினர், அவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்து, வெங்கடேசன், அ.தி.மு.க.,வினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

