கனிமொழி பற்றி ஆபாச பேச்சு அ.தி.மு.க., பகுதி செயலர் கைது
கனிமொழி பற்றி ஆபாச பேச்சு அ.தி.மு.க., பகுதி செயலர் கைது
ADDED : ஆக 20, 2024 09:09 PM

திருச்சி:திருச்சி மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், துாத்துக்குடி எம்.பி., கனிமொழியை ஆபாசமாக பேசிய, அ.தி.மு.க., பகுதி செயலரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகராட்சியின் மெத்தனமான செயல்பாடுகளை கண்டித்து நேற்று, மாநகர அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்தது.
இதில் பேசிய, காந்தி மார்க்கெட் அ.தி.மு.க., பகுதி செயலர் சுரேஷ் குப்தா, உள்ளூர் அமைச்சர் நேரு குறித்து தரக்குறைவாக பேசினார்.
மேலும், தி.மு.க., துணை பொதுச்செயலரும், துாத்துக்குடி எம்.பி.,யுமான கனிமொழி குறித்து ஆபாச அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசினார்.
இது குறித்த தி.மு.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சுரேஷ் குப்தாவை, திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

