ADDED : மே 13, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு அளித்த பேட்டி:
பழனிசாமிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட யார் வாழ்த்து சொன்னாலும் மகிழ்ச்சியே.
எம்.ஜி.ஆர்., போல சம்பாதித்த பணத்தை நடிகர் விஜய் மாணவர்களுக்கும், மக்களுக்கும் செலவழிக்கிறார்.
வெயில் காலத்தில் ஆலமரத்தில் சில இலைகள் உதிரும். பல இலைகள் புதிதாக துளிர்க்கும்.
அதுபோல் அ.தி.மு.க.,வில் இருந்து சிலர் போவர்; பலர் வருவர். வேப்பமரம் போல பட்டுப்போய்விடும் என நினைத்தனர். அ.தி.மு.க., பீனிக்ஸ் பறவை போன்றது. அழிவது போல தெரியும். ஆனால், வீறுகொண்டு எழும்.
இவ்வாறு அவர் கூறினார்.