ஏக்கருக்கு 2,800 கிலோ நெல் விவசாயிகளிடம் வாங்க 'அட்வைஸ்'
ஏக்கருக்கு 2,800 கிலோ நெல் விவசாயிகளிடம் வாங்க 'அட்வைஸ்'
ADDED : பிப் 15, 2025 12:24 AM
சென்னை:மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது.
இதற்காக, நெல் விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில், நேரடி நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு மூட்டைக்கு, 40 கிலோ எடையில் நெல் வாங்கப்படுகிறது.
தற்போது, ஏக்கருக்கு, 60 மூட்டைகள் அதாவது, 2,400 கிலோ நெல் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, துறையின் செயல்பாடு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று ஏக்கருக்கு 70 மூட்டைகள், அதாவது 2,800 கிலோ நெல் கொள்முதல் செய்யுமாறு, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தி உள்ளார்.

