ADDED : மார் 21, 2024 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி , தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை வெறிநாய் கடி போன்ற தகவல்களை இணையதளம் வாயிலாக, பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கலாம். இதற்கு, https://ihip.mohfw.gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில், பெயர், தொலைபேசி எண், வயது, வேலை, கிராமம், மாவட்டம், மாநிலம், நிகழ்வு நடந்த நாள், இடம் மற்றும் தொற்றுநோய் குறித்த விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட பகுதியில், சுகாதாரத்துறை விரைந்து கள ஆய்வு செய்து, கொள்ளை நோய் பரவலை தடுப்பர். எனவே, இந்த இணையதள வசதியை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
டி.எஸ்.செல்வவிநாயகம்,
இயக்குனர், பொது சுகாதாரத்துறை.

