ADDED : மார் 15, 2025 12:54 AM
வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை நகரங்களில், 50 சார் - பதிவாளர் அலுவலகங்கள், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும்
தமிழகத்தில் வெப்ப அலை மாநில அளவிலான பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது, இதையடுத்து, மாநில அளவிலான வெப்ப அலை செயல்திட்டம் தயாரிக்கப்படும்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது
தென்மாவட்டத்திற்கு சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்
பசுமையான தமிழகம் என்ற இலக்கை அடைவதற்கும், நெடுஞ்சாலைகளை பசுமை ஆக்குவதற்கும், தமிழகத்தில் வளரும் வேம்பு, புங்கை, நாவல், புளியமரம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு, 10 லட்சம் கன்றுகள் நட்டு முறையாக பராமரிக்கப்படும்
பயணியர் மற்றும் டிரைவர்களின் வசதிக்காக, மாநில நெடுஞ்சாலைகளில், 10 இடங்களில் சிற்றுண்டி கடைகள், தங்கும் விடுதிகள், ஓய்வறை, மின் வாகனங்களுக்கான மின்சக்தி வழங்கும் வசதி, முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள், வணிக வளாகங்கள் அடங்கிய சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்படும்
கன்னியாகுமரியில் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை, பயணியர் படகு போக்குவரத்து துவங்கப்படும்.