வைகை எக்ஸ்பிரசில் ஒலித்த அலாரம் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
வைகை எக்ஸ்பிரசில் ஒலித்த அலாரம் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
ADDED : மார் 08, 2025 12:24 AM
விழுப்புரம்:உளுந்துார்பேட்டை அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், திடீரென தீ விபத்து எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், பரபரப்பு நிலவியது.
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை, 6:45 மணிக்கு, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்டது.
விருத்தாசலம் வழியாக பகல், 11:10 மணிக்கு உளுந்துார்பேட்டை அருகே ரயில் வந்த போது, கிச்சன் கேபினில் திடீரென புகை ஏற்பட்டதும், விபத்து அபாய எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
உடனடியாக ரயில், உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணியரிடையே பரபரப்பு நிலவியது.
ரயில்வே ஊழியர்களின் சோதனையில், ரயிலில் தீ விபத்து ஏதும் நிகழவில்லை என, உறுதி செய்ததை தொடர்ந்து, 11:20 மணிக்கு ரயில் புறப்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு, 25 நிமிடம் தாமதமாக வந்தது.
அங்கிருந்து, 11:55 மணிக்கு புறப்பட்ட ரயில், 46 நிமிடம் தாமதமாக, பிற்பகல், 2:59 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடைந்தது.
ரயில் பெட்டியில் தீ விபத்து எச்சரிக்கை அலாரம் ஒலித்தது குறித்து ரயில்வே துறையினர் விசாரித்து வருகின்றனர்.